News October 22, 2025

அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின் ஆலோசனை

image

திமுக நிர்வாகிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘உடன்பிறப்பே வா’ தலைப்பின் கீழ் தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதிகளின் நிர்வாகிகளிடம் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் நிலவரம், வேட்பாளர்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

Similar News

News April 5, 2026

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி: EPS

image

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணியின் ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை கிடைக்கும் என EPS தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், இரு இடங்களிலும் வெவ்வேறு கட்சிகள் இருந்தால் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி கிடைக்காது என கூறியுள்ளார். NDA ஆட்சிக்கு வந்தால் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

News April 5, 2026

இந்த கம்பெனிகளின் Full Form தெரியுமா?

image

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களின் Full Form நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ✦TVS: திருக்குறுங்குடி வேங்கராம் சுந்தரம் ✦DLF: டெல்லி லேண்ட் & ஃபைனான்ஸ் ✦HDFC: Housing Development Finance Corporation ✦ICICI: இண்டஸ்ட்ரியல் கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ✦MRF: மெட்ராஸ் ரப்பர் பேக்டரி ✦Paytm: PAY Through Mobile. இது போல உங்களுக்கு தெரிந்தவற்றை கமெண்ட் பண்ணுங்க.

News April 5, 2026

பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு தான் இந்த கொடுமை நேர்ந்துள்ளது. ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை சக்திவேல்(22) என்ற பொக்லைன் டிரைவர் கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!