News October 22, 2025

வக்கீல்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்

image

TN மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு ₹999 செலுத்தினால் மட்டும் போதும். இதில், விபத்து மருத்துவ செலவுக்கு ₹3 லட்சம், எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ₹25 லட்சம், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு <>www.bctnpy.org<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News October 24, 2025

இனிதான் மழை ஆட்டம் ஆரம்பம்

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 24, 2025

பிஹாரில் மோடி இன்று பரப்புரை

image

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

News October 24, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

image

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

error: Content is protected !!