News October 22, 2025
தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்புகள் குறைவு!

வங்கக்கடலில் தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இது வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News October 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
News October 24, 2025
விஜய் ரசிகர்கள் தற்குறிகள்: ஜி.பி.முத்து

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News October 24, 2025
அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு!

சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


