News October 22, 2025
கடலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04142-220 700’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE
Similar News
News February 2, 2026
ஒன்றிய பட்ஜெட் – பண்ருட்டி எம்எல்ஏ கண்டனம்

‘ஒன்றிய பட்ஜெட் 2026 மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கானது அல்ல. மக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கானது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும், ஏழை, நடுத்தர மக்களைப் புறக்கணிக்கும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஊக்குவிக்கும்
இந்த பட்ஜெட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’ என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
News February 2, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
கடலூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.


