News October 22, 2025
நெல்லை: பைக் மோதி ஒருவர் பலி

விக்கிரமசிங்கபுரம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சக்தி வடிவேல் (57) மரக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 16 ம் தேதி இரவு விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன்கோயில் அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர் சக்தி வடிவேல் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News October 24, 2025
நெல்லை: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <
News October 24, 2025
நெல்லை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்<
News October 24, 2025
நெல்லை: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்டம் சார்பில் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி பிற்பகல் முதல் 28ம் தேதி வரை 220 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். திருச்செந்தூர் செல்லும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


