News October 22, 2025
BREAKING: இன்று மாலை உருவாகிறது.. கனமழை அலர்ட்

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.
Similar News
News January 14, 2026
பொங்கல் பரிசு விபரீதம்.. தற்கொலை

பொங்கல் பரிசு ₹3,000 வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன், மொத்த பணத்தையும் மது அருந்த செலவு செய்துள்ளார். பரிசு பொருள்களை மட்டும் வீட்டில் கொடுத்தபோது, செலவிற்காக மனைவி ₹1,000 கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் மனைவியை கரும்பால் அடித்ததால், மனமுடைந்த போன பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஏற்கெனவே <<18843663>>கோவையில் <<>> பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 14, 2026
BREAKING: ₹2,500 உயர்த்தியது தமிழக அரசு

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 20 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஸ், இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் மேலும் ₹2,500 உயர்த்தப்படுவதாக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தப்படுகிறது.
News January 14, 2026
ராமதாஸ், TTV-க்கு தூது விடுகிறதா திமுக?

அதிமுகவில் அன்புமணிக்கு தரப்படும் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, ‘திமுக பக்கம் வாருங்கள்’ என அமைச்சர் ஒருவர் ராமதாஸிடம் டீல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ‘பொங்கல் முடியட்டும்’ என ராமதாஸ் கூறிவிட்டாராம். இதனிடையே, அமித்ஷா EPS-க்கு ஆதரவு அளிப்பதால், அதிருப்தியில் இருக்கும் TTV தினகரனுக்கும் மற்றொரு அமைச்சர் தூது அனுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


