News October 22, 2025
கிருஷ்ணகிரி: 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த புதிய பாஞ்சாலியூா் யாசின் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோரை கடந்த 26-ஆம் தேதி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் நவீன்குமாா் (21), சத்தியரசு (24), ரக்ஷித் (21), பருவீதி கிராமத்தைச் சோ்ந்த ஆதி (20) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 12, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் இன்றைய (பிப்.8) நீர்மட்டம் மொத்த 52 அடியில் 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
News February 12, 2026
கிருஷ்ணகிரியில் உடல் கருகி பலி!

தேன்கனிக்கோட்டை அருகே ஆலஅள்ளி கிராமத்தில் பெங்களூருவை சேர்ந்தவருடைய பண்ணையின் மின்வேலி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று (பிப்.11) மதியம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அப்பகுதி கோழிப்பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மன்மதநாயக் (26) என தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 12, 2026
கிருஷ்ணகிரி: 2 வயது குழந்தை துடிதுடித்து பலி!

காரப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (30), மனைவி தெய்வானை செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவர்களது 2-வது மகன் உத்தரன் (2). நேற்று உத்தரனையும் செங்கல் சூளைக்கு அழைத்து சென்ற போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்துள்ளான். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


