News October 22, 2025
கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி: திருப்பத்துாரிலிருந்து பர்கூர் செல்லும் ‘பி6’ டவுன் பஸ் நேற்று (அக்.21) பர்கூர் நோக்கி வந்தது. பேருந்து பர்கூர் வந்ததும், அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது மதுபோதையில் இருந்த அபிஷேக், யஷ்வந்த் ஆகிய இளைஞர்கள் இறங்க மறுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடத்துனர் அளித்த புகாரின் பெயரில் போதை ஆசாமிகள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News October 24, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்ட அரசு அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியை அடுத்த நாடுவானப்பள்ளியைச் சேர்ந்தவர் மங்கம்மா. இவர் மாடு வாங்குவதற்கு அரசு வழங்கும் கடனுதவியை அளிக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேப்பனப்பள்ளியை அடுத்த தடத்தரையில் வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றும் முருகேசனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று. அக்.23 கைது செய்தனர்.
News October 24, 2025
கிருஷ்ணகிரி: EB பிரச்சனையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
கிருஷ்ணகிரியில் 101 ஏரிகள் நிரம்பின!

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 101 ஏரிகள் முழுமையாகவும், 77 ஏரிகள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன. 110 ஏரிகள் பாதிக்கும் மேல் நிரம்பி உள்ளன. 288 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 446 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 218 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தொடர் மழையால் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


