News October 22, 2025
திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ஒடிசாவைச் சேர்ந்தவர் டிரானாசூனா (47). திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார். நடேசன் நகர் பகுதியில் கோவை – கரூர் மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார், டிரானாசூனா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அறை எண் 20-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
திருப்பூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

திருப்பூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருப்பூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)


