News October 22, 2025

தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

image

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News February 6, 2026

தேனி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

தேனி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

தேனி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 6, 2026

தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

சின்னமனூர், அய்யம்பட்டியை சேர்ந்தவர் மணிபாரதி (27). இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக வலது கால் தொடைக்கு கீழ்ப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வலி அதிகரித்துள்ளது. இதனால் வலியின் வேதனையில் இருந்து வந்த மணிபாரதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் நேற்றூ வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!