News October 22, 2025
சற்றுமுன்: World சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று(அக்.22) ஒரே நாளில் 1 அவுன்ஸ்(28g) 241 டாலர்கள் குறைந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ₹21,181 குறைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் 602 டாலர்கள் உயர்ந்த நிலையில், ஒரே அடியாக விலை சரிந்துள்ளதால், இது இந்திய சந்தையிலும் எதிரொலித்து தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது? கமெண்ட் பண்ணுங்க.
News October 22, 2025
ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா சாப்டர் 1’

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஆங்கில பதிப்பு வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகளை குறைத்து, ஆங்கில பதிப்பு வெளியாக உள்ளது. அதன்படி, ஆங்கில பதிப்பின் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 14 நிமிடங்கள் 45 விநாடிகள் ஆகும். பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம், இதுவரை உலகளவில் ₹800 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 22, 2025
அப்துல் கலாமின் குரு ’ஏக்நாத் சிட்னிஸ்’

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) தோற்றுவித்தவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஏக்நாத் சிட்னிஸ் மறைவுக்கு(1925-2025) பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் தேர்ந்தெடுத்த சிலரில் இவரும் ஒருவர். அப்போது இளம் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழிகாட்டி, DRDO தலைவராக, பின் ஜனாதிபதியாக உயர இவரும் ஒரு காரணமாக இருந்தார். 1985-ல் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. RIP