News October 22, 2025
கரூர்: சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி!

கரூர்: புலியூர் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48). இவர் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.21) தனது பைக்கில் தாந்தோணிமலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 3, 2026
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 3, 2026
கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரிய ரங்கப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை விற்றதாக திருமூர்த்தி என்பவரது மனைவி வசந்தா, 67; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 145 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


