News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும். TNSDMA. இன்று அதிகாலை முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் .

Similar News

News October 24, 2025

விழுப்புரம்: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

விழுப்புரம் வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<> அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் <<>>சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை

image

பஹ்ரைன் நாட்டில் நேற்று (அக்.23) இரவு நடந்த U-18 மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் விழுப்புரம் நகரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இளம் கபடி வீராங்கனை கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று சாதித்துள்ளார். இந்த வெற்றி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெருமையையும், இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

News October 24, 2025

விழுப்புரம்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!