News October 22, 2025

டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

image

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Similar News

News January 16, 2026

FLASH: பொங்கல் விடுமுறை.. கூடுதலாக ஒரு சிறப்பு ரயில்!

image

பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவரும் தெற்கு ரயில்வே நாகர்கோவில் – தாம்பரம் இடையே கூடுதலாக ஒரு ரயிலை(06160) அறிவித்துள்ளது. இது, ஜன.18-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு <>IRCTC-ல்<<>> தொடங்குகிறது.

News January 16, 2026

அடுத்து அதிமுக ஆட்சி தான்! அடித்து சொன்ன EPS

image

TN-ல் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்ட மக்கள் காத்திருப்பதாக EPS தெரிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்த நாளையொட்டி (ஜன.17), தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். TN மக்களுக்கு நல்லாட்சி தரும் கடமை, பொறுப்பு அதிமுகவினர் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News January 16, 2026

காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

image

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!