News October 22, 2025

₹343 லட்சம் கோடி.. ஆப்பிளின் வரலாறு காணாத உச்சம்

image

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவு விற்பனையானதால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹343 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ₹390 லட்சம் கோடியுடன் Nvidia உள்ளது.

Similar News

News October 22, 2025

சாராயம் விற்பதில் சாதிப்பது தான் திராவிட மாடலா?: PMK

image

தமிழகத்தில் 3 நாட்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்று அன்புமணி சாடியுள்ளார். தீபாவளியை ஒட்டி 3 நாட்களில் ₹790 கோடி மதுவிற்பனை நடைபெற்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு மக்களை அரசு தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அன்புமணி, சாராயத்தில் சாதிப்பது தான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 22, 2025

சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹2,000 விலை குறைந்தது

image

வெள்ளி விலை இன்று(அக்.22) ஒரே நாளில் கிலோவுக்கு ₹2,000 குறைந்துள்ளது. கிராமுக்கு ₹2 குறைந்து ₹180-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,000 குறைந்து ₹1,80,000-க்கும் விற்பனையாகிறது. தீபாவளிக்கு முன்பு தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு வேகமாக அதிகரித்து வந்த வெள்ளியின் விலையானது 1 வாரத்தில் கிலோவுக்கு ₹27,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

பனீரை தொடர்ந்து முட்டையிலும் கலப்படமா?

image

<<18055935>>பனீரை<<>> தொடர்ந்து, முட்டைக்கும் புதிய சிக்கல் முளைத்துள்ளது. சூப்பர் மார்கெட், ஆப்களில் விற்கப்படும் முட்டைகள் தரமற்று இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பேக்கிங் நன்றாக இருப்பதாகவும், ஆனால் தரம் குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். சிறிய முட்டை, பெரிய முட்டையின் விலைக்கு விற்கப்படுவதாக குமுறுவதோடு, சுவையும் மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது முட்டையிலும் கலப்படமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!