News October 22, 2025
டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹங்கேரியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை தங்களிடம் வழங்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
Similar News
News October 22, 2025
அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின் ஆலோசனை

திமுக நிர்வாகிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘உடன்பிறப்பே வா’ தலைப்பின் கீழ் தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதிகளின் நிர்வாகிகளிடம் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் நிலவரம், வேட்பாளர்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
News October 22, 2025
புடினிடம் பேசுவது Waste Of Time: டிரம்ப்

உக்ரைன் போர் தொடர்பாக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார் டிரம்ப். இன்னும் நேரம் தேவைப்படுவதாக புடின் கூறியதால் ஹங்கேரியில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து, புடின் தயாராக இல்லாதபோது அவரை சந்தித்து டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என டிரம்ப் கூறியிருக்கிறார். மீண்டும் டிரம்பை சந்திக்க புடின் நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 22, 2025
வக்கீல்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்

TN மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு ₹999 செலுத்தினால் மட்டும் போதும். இதில், விபத்து மருத்துவ செலவுக்கு ₹3 லட்சம், எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ₹25 லட்சம், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு <