News October 22, 2025
மழைக்காலத்தில் உதவும் டிப்ஸ்!

*மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம்.
*ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
*ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.
Similar News
News January 24, 2026
இனி பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதி

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் ஊதியத்தை, பிள்ளைகளின் கல்விக்காகவே அதிகம் செலவு செய்கின்றனர். ஆண்டுக் கட்டணம், புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட பல வகைகளில் பெற்றோர்களிடம் ₹30,000 முதல் ஒரு லட்சத்திற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையிலும் ஈடுபடுகின்றன. இதனால், பெற்றோர் கடன் வாங்கும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதை கட்டுப்படுத்த <<18945619>>TN அரசு நடவடிக்கை<<>> எடுத்துள்ளது.
News January 24, 2026
இரவல் வார்த்தைகளை பேசும் மாணிக்கம் தாகூர்: இன்பதுரை

பண அதிகாரம் கொண்ட NDA கூட்டணியை வீழ்த்த வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூருக்கு, அதிமுக எம்பி இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். சுய சிந்தனை கொண்ட மாணிக்கம் தாகூர், கடந்த வாரம் கட்சிக்குள் அடித்த புயலால், யாரோ எழுதி கொடுத்த இரவல் வார்த்தைகளை நிர்பந்தத்தால் பேசியிருக்கிறார்; வெள்ளையர்களிடம் போராடி பெற்று தந்த சுதந்திரம், காங்.,க்கு கிடைக்காமல் போனதுதான் நகை முரண் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 24, 2026
மெளனம் கலைக்கும் விஜய்

‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரம், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து விஜய் மௌனியாக இருக்கிறார் என பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நாளை நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் இவ்விவகாரங்கள் குறித்து விரிவாக விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. மேலும், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பையும் விஜய் வெளியிடவுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.


