News October 22, 2025
விழுப்புரம் பாண்டியன் நகர் வடிகால் ஆட்சியார் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேற்றும் வடிகால் வாய்க்காலை இன்று (அக்.21) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை காரணமாக நீர் தேக்கம் ஏற்படாத வகையில் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.. பொதுமக்கள் தேவைகள் பற்றியும் அதிகாரிகள் தகவல் பெற்றனர்.
Similar News
News February 12, 2026
விழுப்புரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(42). பெயிண்டரான இவரது சகோதரி வேல்விழி, தம்பி வேலு ஆகியோர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 12, 2026
விழுப்புரத்தில் பரிதாப பலி!

சேலத்தைச் சேர்ந்தவர் ஹரி(48). இவர், 5 ஆண்டுகளாக விழுப்புரத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். உடல் நல பாதிப்பால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று நகராட்சி மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 12, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 11) இரவு முதல் இன்று (பிப். 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


