News October 21, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர் விவரம்!

image

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் இரவு ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையர் ஜான் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள.

Similar News

News October 22, 2025

திருப்பூர்: பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

image

பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று கரைப்புதூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்து சாக்கடையில் விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் குமார் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 22, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News October 22, 2025

JUSTIN:திருப்பூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.

error: Content is protected !!