News October 21, 2025
அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 22, 2025
குரூப் 4 ரிசல்ட் பார்ப்பது எப்படி?

ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுக்கான <<18073242>>குரூப் 4<<>> தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் <
News October 22, 2025
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை, இன்று ₹3,680 குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹2,400 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,280 குறைந்துள்ளது. இதன்மூலம், 1 கிராம் ₹11,540-க்கும், 1 சவரன் ₹92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேநாளில் தங்கம் விலை பெரியளவில் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News October 22, 2025
BREAKING: குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது

ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4,662 பணியிடங்களுக்கு TNPSC நடத்திய தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியிருந்தனர். TNPSC இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். SHARE IT.