News October 21, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News April 6, 2026
டேட்டிங் APP.. கணவன், மனைவிக்கு தெரியாமல் உறவு!

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் APP-களின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 65% ஆண்களும், 35% பெண்களும் என நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் APP-களை பயன்படுத்துகின்றனர். இதில், 18% உடன் பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் 17% உடன் 2-ம் இடம், டெல்லி 11% உடன் 3-ம் இடத்தில் உள்ளது.
News April 6, 2026
நயினார், சவுமியா வேட்புமனு தாக்கல்

கடைசி நாளான இன்று அரசியல் தலைவர்கள் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தருமபுரியில் சவுமியா அன்புமணி, சாத்தூரில் நயினார், கோவை வடக்கில் வானதி, அவிநாசியில் எல்.முருகன், சென்னை மயிலாப்பூரில் தமிழிசை, நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.கேந்தி, அறந்தாங்கியில் கவிதா, ராசிபுரத்தில் பிரேம்குமார் உள்ளிட்ட NDA கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
News April 6, 2026
CINEMA 360: எதிர்பாரா காம்போவில் தனுஷ்!

✦‘சர்தார்’ PS மித்ரன் – தனுஷ் கூட்டணி விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ✦‘ராட்சசன்’ ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடித்துள்ள ‘இரண்டு வானம்’ பட அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது ✦வெளியான 18 நாள்களில் ‘துரந்தர் 2’ படம் ₹1,213 கோடி வசூலித்துள்ளது ✦‘அரசன்’ பட ஷூட்டிங்குடன் சேர்த்து வடசென்னை யூனிவர்சில் இடம்பெற்றுள்ள ‘ராஜன் வகையறா’ ஷூட்டிங் தொடங்கியுள்ளது.


