News October 21, 2025
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி அமைச்சர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அக்.21ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News October 22, 2025
கள்ளக்குறிச்சி உதவி எண்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 1077,04151-228801, இரண்டு கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும்
செயல்படும் என ஆட்சியர் தகவல்
News October 22, 2025
கள்ளக்குறிச்சி ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் பொருட்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான அரிசி,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தகவல்.