News October 21, 2025
அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: நயினார்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொலி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து பாஜக உறுதுணையாக களப்பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
நினைச்சு பார்க்கமுடியாத நன்மைகளை தரும் ‘நன்னாரி’

நன்னாரி என்பது லெமன் ஜூஸில் சுவைக்காக சேர்க்கப்படும் சாதாரண பொருள் அல்ல. அது பல பிரச்னைகளுக்கு அருமருந்தாகிறது. ➤நன்னாரி வேரை பொடியாக்கி தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்தம் தணியும் ➤அரை ஸ்பூன் நன்னாரி பொடியை பாலில் கலந்து குடித்துவர மூலச்சூடு, நீர்க்கடுப்பு நீங்கும் ➤அரை ஸ்பூன் நன்னாரி வேர் பொடியுடன் 20 உலர் திராட்சை சேர்த்து கஷாயம் வைத்து இரவு குடித்துவந்தால் மலச்சிக்கல் தீரும். SHARE.
News October 22, 2025
மழைக்காலத்தில் துணி காய்வதற்கு சூப்பர் டிப்ஸ்

மழைக்காலம் வந்தாலே பலருக்கும் முதலில் தோன்றுவது, துணி எப்படி காயும்? ஈரமாவே இருந்தால் துர்நாற்றம் வீசுமே என்பது தான். இதற்காக பலரும் துணிகளை மூட்டையாக சேர்த்துவைத்து, மழை விட்டபிறகு மொத்தமாக துவைப்பார்கள். மழைக்காலத்திலேயே துவைக்கும் துணிகளை காயப்போட்டு எடுக்க சூப்பர் டிப்ஸ்களை மேலே SWIPE செய்து பாருங்கள். நண்பர்கள், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 22, 2025
14 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: IMD

TN-ல் காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதேபோல், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். SHARE IT.