News October 21, 2025

25 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

image

இன்று இரவு 10 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், அரியலூர், கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இரவில் வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க. உங்க ஊரில் மழையா?

Similar News

News January 31, 2026

குழந்தை School-க்கு போக பயப்படுதா? இத செய்யுங்க

image

பள்ளியில் சேர்த்து பல மாதங்கள் ஆகியும் School-க்கு செல்லமாட்டேன் என குழந்தை அடம்பிடித்தால், அவர்களை அடிக்காமல் அவர்களிடம் சில விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். ▶சக மாணவர்களுடன் பிரச்னையா என்பது பற்றி பேசுங்கள் ▶பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என கேளுங்கள் ▶ஆசிரியர்கள் அடிக்கிறார்களா என விசாரியுங்கள். SHARE.

News January 31, 2026

நாளை இது நடந்தால் தங்கம் விலை மேலும் குறையும்

image

<<19013254>>தங்கம் விலை விவகாரத்தில்<<>> என்ன நடக்கிறது என புரியாமல் நடுத்தர மக்கள் குழப்பத்தில் உள்ளனர். சர்வதேச நாடுகளிடையே நடக்கும் பொருளாதார பிரச்னையே இதற்கு காரணம். அதனை சரி செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. இதனால், தங்க இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை(BCD) 6%-ல் இருந்து மேலும் குறைக்கலாமா என மத்திய அரசு ஆலோசிக்கிறதாம். கடந்த 2024-25 பட்ஜெட்டின்போது 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

News January 31, 2026

தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா

image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘D55’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை, தயாரிப்பு நிறுவனம் SM-ல் வெளியிட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!