News April 17, 2024
பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 17, 2025
மாற்றத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நவ.17ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு காதொலி கருவி, 2 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.