News October 21, 2025
நாமக்கல்லில் முட்டை விலை அறிவிப்பு!

நாமக்கல்லில் இன்று அக்டோபர்-21ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
Similar News
News October 22, 2025
நாமக்கல்லில் ரூ.15.06 கோடிக்கு மது விற்பனை!

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களில் ரூ.15.06 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
News October 22, 2025
நாமக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

மழைக்காலம் என்பதால் குழந்தைகளை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க விடாமல் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகளின் ஆழம், நீரோட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். பாதுகாப்பே முதன்மை என மக்கள் நலனுக்காக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 22, 2025
JUST IN: நாமக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.