News October 21, 2025
வேலூர்: 7 கோடியை 66 லட்சத்திற்கு மது விற்பனை!

தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் நேற்று 7 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையானது. என டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 22, 2025
வேலூரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

வேலூர்: குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஏரி 174 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 26 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு கூடநகரம் ஏரி நிரம்பி வழிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் நீர்வளத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
News October 22, 2025
வேலூர்: வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைக் குறுக்கே வந்த 10 வயது சிறுமியின் மீது மோதியதால், சிறுமியின் தந்தை நவீன் குமார் (35) அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் முருகன் வீட்டிற்கு சென்று நேற்று இரவு படுத்திருந்தபோது உயிரிழந்துள்ளார். குடியாத்தம் போலீசார் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி, நவீன் குமாரை கைது செய்தனர்.
News October 22, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.