News October 21, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

ஈரோடு அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

தருமபுரி, கெண்டைநல்லி, காவக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்,35, தனது மனைவி ராஜேஸ்வரி, 2 குழந்தைகளுடன் சென்னிமலை, 1010 நெசவாளர் காலனியில் வசித்து கொண்டு லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். முருகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து தற்கொலை செய்வதாக அடிக்கடி கூறி வந்தவர், நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 22, 2025

பவானி: வெள்ள அபாய எச்சரிக்கை!

image

கோணமூலை ஊராட்சி பவானி ஆறு கரையோர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கும் அதிகமாக பலமடங்கு வெள்ளம் வந்த வண்ணம் உள்ளதால் பவானி ஆறு கரையோரம் குடியிருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும். ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றில் இறங்கி செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

News October 21, 2025

ஈரோடு மாவட்ட குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

image

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தல் மற்றும் மீட்பு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கிய முன்னுரிமைகள் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் குழந்தைகள் மீட்பு இலவச தொலைபேசி எண்.1098 தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!