News October 21, 2025
சேலம்: பணிநியமன ஆணை வழங்கிய காவல் ஆணையாளர்

காவலர் வீரவணக்க நாள் விழாவை முன்னிட்டு, பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய பணி நியமன ஆணைகளை இன்று (அக்.21) வழங்கப்பட்டன. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி தலைமையிலான நிகழ்ச்சியில், தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளில் 6 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Similar News
News October 22, 2025
சேலம்: மழையால் பாதிப்பா..? உடனே CALL!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மைய அலுவலகம்: 0427-2212844, கொண்டலாம்பட்டி மண்டலம்: 0427 -2461313, அஸ்தம்பட்டி மண்டலம்: 0427 -2310095, சூரமங்கலம் மண்டலம்: 0427-2387514, அம்மாபேட்டை மண்டலம்: 0427 -2263161. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 22, 2025
சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
News October 22, 2025
JUST IN: சேலம் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.