News October 21, 2025
Cinema Roundup: போர் வீரனாக நடிக்கும் பிரபாஸ்

*விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பைசன்’ படத்தை தொடர்ந்து ‘டாடா’ கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல். *பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வரும் 23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. * மிர்ச்சி சிவாவின் ‘தமிழ் படம்’ 3-ம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
Similar News
News October 22, 2025
இந்தியா மீதான USA வரி குறைகிறதா?

இந்தியா – USA இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதன் படி, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கும் வரிகள் தற்போதுள்ள 50% இலிருந்து 15–16% ஆக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, USA-ன் சோளம் & சோயா உணவுப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News October 22, 2025
BREAKING: கனமழை வெளுக்கும்.. வந்தது ரெட் அலர்ட்

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.