News October 21, 2025
தினமும் 2.5 GB டேட்டா.. அசத்தல் ரீசார்ஜ் ஆஃபர்

BSNL தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் ஜூப்ளி பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு தினமும் 2.5GB டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS உள்ளிட்ட சலுகைகளும் அடங்கும். ஜியோ, ஏர்டெல், VI உள்ளிட்ட நிறுவனங்களில் தினமும் 2.5GB டேட்டா பெற ₹300-க்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். SHARE IT.
Similar News
News October 22, 2025
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!
News October 22, 2025
டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
News October 22, 2025
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.