News October 21, 2025
BREAKING: முதல்வரின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு.!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் அக்.24, 25 ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர இருந்தார். இந்நிலையில், தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதால், இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
தென்காசி: கர்ப்பிணி பெண் தற்கொலை!

சிவகிரி அருகே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (23). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று முந்தினம் தனது பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், வாசு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்
News January 25, 2026
தென்காசி மக்களே., காவல்துறை அறிவிப்பு!

தென்காசி மாவட்ட மக்களே ஜன. 24 முதல் cctns-2. 0வில் மனு (csr) மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் சில ஆவனங்கள் கொண்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கொண்டு எடுத்து வர வேண்டும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News January 25, 2026
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


