News October 21, 2025
Sports Roundup: இந்திய அணிக்கு ₹22 லட்சம் பரிசு

* 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை கால்பந்துக்கு முதல் முறையாக தகுதி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு ₹22 லட்சம் பரிசு அறிவிப்பு. *பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஷவ் மகாராஜ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். *US கர்லிங் சாம்பியன்ஷிப்பில் நைஜீரியா, சவுதி அரேபியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி. *ஆசிய யூத் கேம்ஸ், குராஷ் தற்காப்பு கலையில் இந்தியா 3 பதக்கம் வென்றுள்ளது.
Similar News
News October 22, 2025
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!
News October 22, 2025
டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
News October 22, 2025
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.