News October 21, 2025
உழவர்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி

பருவமழை காரணமாக நெல் கொள்முதலை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியில் 70% அறுவடை முடிந்தும், 60% நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நெல் ஈரப்பத வரம்பை 25%ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் உழவர்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக சாடியுள்ளார்.
Similar News
News April 2, 2026
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹16,000 குறைந்தது

தங்கம் விலை இன்று மட்டும் <<19548468>>சவரனுக்கு ₹2,400<<>> குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த 1 மாத தங்கம் விலை நிலவரம் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அதாவது, மார்ச் 1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200 ஆக இருந்தது. தற்போது அது ₹1,10,000 ஆக குறைந்துள்ளது. வெள்ளி விலையும் பெருமளவு சரிந்து 1 கிலோ ₹2.55 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2026
எரிபொருள் தட்டுப்பாடு… WFH-க்கு மாறும் மலேசியா!

ஈரான் போரின் தாக்கம் பல ஆசிய நாடுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை, பாக்., உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றமும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஏப்.15 முதல் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓரிரு வாரங்களில் போர் நிலவரம் சீரடையவில்லை எனில், நம் நாட்டிலும் இந்த தாக்கம் அதிகரிக்கலாம்.
News April 2, 2026
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

வணிக சிலிண்டர்கள் விலை உயர்வைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையும் உயரும் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், ஹிந்துஸ்தான், சிலிண்டர்கள் விநியோகம் சீராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.


