News October 21, 2025

தீபாவளி விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம்

image

தீபாவளி விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு ₹5.40 லட்சம் கோடிக்கு வர்த்தகமாகியுள்ளதாக CIAT தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ₹4.25 லட்சம் கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 25% அதிகரித்துள்ளது. இது, பலகாரங்கள், ஆடை, காலணி, வீட்டு அலங்கார பொருள்கள், அன்றாடம் தேவைப்படும் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை கொண்டு கணக்கிடப்படுகிறது. GST சீர்திருத்தம் இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Similar News

News April 7, 2026

தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

image

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.

News April 7, 2026

வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

image

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

News April 7, 2026

‘மாம்பழம்’ சின்னம்: ஐகோர்ட்டை நாடிய ராமதாஸ்!

image

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சின்னத்தை முடக்க மறுத்து உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தியிருந்தது.

error: Content is protected !!