News October 21, 2025

மனைவியை பிரிந்தாரா சேவாக்?

image

EX கிரிக்கெட் வீரர் சேவாக், அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்த சூழலில், தீபாவளியை முன்னிட்டு அவர் தனது குழந்தைகள், தாயாருடன் எடுத்த போட்டோக்களை SM-ல் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஆர்த்தி வெளியிட்ட பதிவில் சேவாக் இடம்பெறவில்லை. இதையடுத்து விவாகரத்து தகவல் உண்மைதான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அவர் கடைசியாக 2023-ல் மனைவியுடன் புகைப்படம் வெளியிட்டார்.

Similar News

News October 22, 2025

கூகுளுக்கு புது தலைவலி: களமிறங்கிய புது பிரவுசர்

image

ஏஐ துறையில் பெரும் புரட்சி செய்து வரும் Open AI, ChatGPT Atlas என்ற புதிய பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. இது AI உடன் இணைந்து வருவதால் பயனர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தை தரும் என Open AI நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மற்றொரு AI நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டி ‘காமெட்’ என்ற பிரவுசரை களமிறக்கியுள்ளது. ஒரே சமயத்தில் 2 புதிய புரவுசர்கள் வந்துள்ளது கூகுள் குரோமுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

News October 22, 2025

மகளிர் உலகக்கோப்பையில் தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை

image

நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. WWC-ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்‌சர்களை(11) விளாசி அந்த அணி அசத்தியுள்ளது. ஏற்கெனவே இதே தெ.ஆப்பிரிக்கா அணி, 2017-ல் 10 சிக்‌சர்களை அடித்திருந்தது. அவர்களே தங்களது சாதனையை 8 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளனர். 2-வது இடத்தில் 9 சிக்‌சர்களுடன் நியூசிலாந்து உள்ளது.

News October 22, 2025

வரலாற்றில் இன்று

image

*1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்விளக்கைப் பரிசோதித்தார்.
*1965 – இந்தியா- பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
*2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
*2008 – இஸ்ரோ சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
*2016 – இந்தியா கபடி அணி உலகக் கோப்பையை வென்றது

error: Content is protected !!