News October 21, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

காலையில் ஆபரணத் <<18061425>>தங்கத்தின் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்த நிலையில், மாலையில் தடாலடியாக சரிவை சந்தித்துள்ளது. தற்போது, 1 சவரன் ₹1,440 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ₹12,000-க்கும், 1 சவரன் ₹96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
Similar News
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.


