News October 21, 2025

BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வந்ததால், முதல்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டள்ளது. இதனால், அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 அடிஉயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.20 அடிக்கு நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 21, 2025

BREAKING: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள பள்ளிக்கு மட்டும் நாளை(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News October 21, 2025

சென்னையில் ரூ.158 கோடிக்கு மது விற்பனை

image

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

News October 21, 2025

BREAKING: செம்பரபாக்கம் ஏரி இன்றே திறப்பு?

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரபாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1110 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் முழுகொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு 100 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!