News October 21, 2025
+12 படித்தால் போதும்.. ₹63,200 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள 228 Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 12-வது தேர்ச்சி பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹19,900- ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
Similar News
News October 22, 2025
வரலாற்றில் இன்று

*1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்விளக்கைப் பரிசோதித்தார்.
*1965 – இந்தியா- பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
*2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
*2008 – இஸ்ரோ சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
*2016 – இந்தியா கபடி அணி உலகக் கோப்பையை வென்றது
News October 22, 2025
ஐஸ்லாந்தில் கொசுக்கள்: அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்

பொதுவாக பனி பிரதேச நாடுகளில் கொசுக்கள் இருக்கவே இருக்காது. ஆனால் சமீபத்தில் மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஒரு காட்டில் விஞ்ஞானிகள் கொசுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது கப்பல் அல்லது கண்டெய்னர் வழியாக இங்கு வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றமும் கொசுக்கள் பரவலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடுமையான குளிரிலும் வாழ கொசுக்கள் பழகியுள்ளதால் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News October 22, 2025
வீட்டை சொர்க்கமாய் மாற்றும் செடிகள் இவைதான்

முன்பு வீட்டை சுற்றி மரம், செடி, கொடி என சூழ்ந்து இருந்ததால், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தோம். இன்று அப்பர்ட்மென்டுகளில் சுத்தமான காற்று கூட கிடைக்காமல், Air purifier வைத்து வாழ்த்து கொண்டிருக்கிறோம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என்றாலும் வீட்டின் பால்கனியில் சில செடிகளை வைத்து வளர்த்தால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும். அது என்ன செடிகள் என மேலே உள்ள SWIPE செய்து பாருங்கள்.