News October 21, 2025
BREAKING: முடிவை மாற்றினார் CM ஸ்டாலின்

தொடர்மழை காரணமாக CM ஸ்டாலினின் தென்காசி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை வழங்க அக்.24 அன்று அவர் தென்காசி செல்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது பயணம் குறித்த புதிய தேதி விரைவில் வெளியாக உள்ளது. மழைக்கால பணிகளை CM ஸ்டாலின் முடுக்கிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 30, 2026
சற்றுமுன்: மதுபானங்களின் விலை குறைகிறது

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீர் மீதான வரி 110% -யிலிருந்து 60% ஆக குறைக்கப்படலாம் எனவும் Premium Wine மீதான 150% வரி 130% ஆக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைக்கப்பட்டால் மது விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
News January 30, 2026
இன்ஸ்டாவில் Re-entry கொடுத்த கோலி!

இன்று காலை முதலே <<18998100>>கோலியின் <<>>இன்ஸ்டா ID, ‘User not found’ என வந்ததால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர் இன்ஸ்டாவை விட்டு வெளியேறிவிட்டாரோ என பலரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், தற்போது அக்கவுண்ட் மீண்டும் Activate ஆகியுள்ளது ரசிகர்கள் உற்சாகமடைய செய்துள்ளது. அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? அவராகவே வெளியேறினாரா என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
News January 30, 2026
மெக்கானிக்கிலிருந்து ₹8,980 கோடி Contract வரை!

உலகப்புகழ் பெற்ற Khaby Lame, தனது பிராண்டான Step Distinctive Limited-ஐ, Rich Sparkle என்ற ஹாங்காங் நிறுவனத்திற்கு ₹8,980 கோடிக்கு விற்றுள்ளார். தனது உருவத்தை டிஜிட்டலாக உருவாக்கி, அதன் மூலம் அவர் Rich Sparkle நிறுவனத்திற்கு கன்டென்ட் உருவாக்கவுள்ளார். 2020-ம் ஆண்டு வரை மெக்கானிக் வேலை செய்து வந்த Khaby Lame, ஒரே ஒரு ரியாக்ஷன் மூலம், இன்று ₹8,000 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.


