News October 21, 2025
வங்கக் கடலில் புயல் உருவாகுமா? IMD விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாக IMD அறிவித்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து இயல்பைவிட 59% மழை பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுமா என்பது நாளை தெரியும் எனவும் IMD தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. உங்க ஊரில் மழையா?
Similar News
News January 18, 2026
டிரம்ப் குற்றவாளி: கொமேனி

ஈரானின் உச்ச தலைவர் கொமேனி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்பை குற்றவாளி என்று கூறியுள்ளார். போராட்டங்களின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள்தான் பெரும் சேதங்களை ஏற்படுத்தி, பல ஆயிரம் பேரைக் கொன்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கொமேனி எச்சரித்துள்ளார்.
News January 18, 2026
இந்திய அரசியலமைப்பு திருத்தம் வரலாறு தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டமே உலகிலேயே அதிக திருத்தங்களுக்கு உள்ளான அரசியலமைப்பு சட்டமாகும். நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இதுவரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 2023-ல் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது.
News January 18, 2026
₹16 லட்சம் கோடியை எட்டும் சில்லறை ஆடை வணிகம்

நாட்டில் சில்லறை ஆடை வணிகம் 2030-ம் ஆண்டுக்குள் ₹16 லட்சம் கோடியாக விரிவடையும் என்று ‘CareEdge’ தெரிவித்துள்ளது. தற்போது, சில்லறை வணிகம் ₹9.3 லட்சம் கோடியுடன் சந்தையில் 41% பங்கைக் கொண்டுள்ளது. பிராண்டட் ஆடைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இது மேலும் 13% வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 & 3 அடுக்கு நகரங்களில் ஜூடியோ, மேக்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன.


