News October 21, 2025
கனமழை.. திமுக நிர்வாகிகளை களமிறக்கும் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பருவமழை தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் DCM உதயநிதி, அமைச்சர் KN.நேரு, மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
Similar News
News April 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 முதல், இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 9, 2026
8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
News April 9, 2026
பிரேமலதா செய்தது துரோகம்: மீசை ராஜேந்திரன்

தேமுதிகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை மீசை ராஜேந்திரன் விளக்கியுள்ளார். திமுகவை எந்த காலத்திலும் விஜயகாந்த் ஆதரித்ததில்லை என்றும், திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது விஜயகாந்திற்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; சீட் ஒதுக்கியதில் தேவர், இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


