News October 21, 2025
நாமக்கல்: அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி!

நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த 2 காவல் துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை இன்று (21.10.2025) செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா நேரில் வழங்கினார். உடன் பிற காவலர்கள் மற்றும் அந்த குடும்பத்தினர்கள் இருந்தனர்.
Similar News
News October 22, 2025
நாமக்கல் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை(அக்.23) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News October 22, 2025
நாமக்கல்லில் ரூ.15.06 கோடிக்கு மது விற்பனை!

நாமக்கல் மாவட்டத்தில் இந்த தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களில் ரூ.15.06 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின் தீபாவளி விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
News October 22, 2025
நாமக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

மழைக்காலம் என்பதால் குழந்தைகளை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க விடாமல் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகளின் ஆழம், நீரோட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். பாதுகாப்பே முதன்மை என மக்கள் நலனுக்காக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.