News October 21, 2025

உணவை வேக வேகமாக சாப்பிடுறீங்களா?

image

வேகமாக சாப்பிடுவதால், இந்த 3 பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது ✱மெதுவாக சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாக சாப்பிடும் போது, இந்த சிக்னல் கிடைக்காததால், அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் ✱உணவை நன்கு மெல்லாமல் விழுங்குவதால், செரிமான பிரச்னை ஏற்படலாம் ✱ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து குறைவதால், நீரிழிவு நோய் வரலாம். கவனமா இருங்க.

Similar News

News October 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 496
▶குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

News October 22, 2025

ஸ்ரீலீலா தான் நேஷனல் கிரஷ்: ரன்வீர் சிங்

image

ஸ்ரீலீலா தான் உண்மையான நேஷனல் கிரஷ் என நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அவரது ஒழுக்கம் மற்றும் திறமை ஆசாத்தியமானது எனவும், ஸ்ரீலீலாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடஇந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அட்லீயின் விளம்பர படத்தில் நடித்திருந்தனர்.

News October 22, 2025

புயல் என்றால் என்ன தெரியுமா?

image

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது. SHARE IT!

error: Content is protected !!