News October 21, 2025
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
Similar News
News October 22, 2025
பவானி: வெள்ள அபாய எச்சரிக்கை!

கோணமூலை ஊராட்சி பவானி ஆறு கரையோர பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் பவானி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலைக்கும் அதிகமாக பலமடங்கு வெள்ளம் வந்த வண்ணம் உள்ளதால் பவானி ஆறு கரையோரம் குடியிருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும். ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றில் இறங்கி செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
News October 21, 2025
ஈரோடு மாவட்ட குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தல் மற்றும் மீட்பு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது முக்கிய முன்னுரிமைகள் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் குழந்தைகள் மீட்பு இலவச தொலைபேசி எண்.1098 தொடர்பு கொள்ளவும்.
News October 21, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.