News October 21, 2025
குமரி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News January 30, 2026
குமரி: உதவி பேராசிரியரிடம் நகை அபேஸ் செய்த கும்பல்

குமரி, சித்தன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (30). இவர் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அவரை ஆபாசமாக பேசிய அந்த நபர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து செல்போன் எண் வைத்து விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு…!

குமரி மாவட்ட மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். அதில் புகார் மனுக்கள் மீதான போலீஸ் விசாரணை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், காவல்துறை மக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100, 6385211224 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதில் புகார் செய்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். SHARE IT
News January 30, 2026
குமரி: கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளம்பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது கண்டன்விளை பகுதியை சேர்ந்த ரெஜிஸ் என்ற வாலிபர் 1.20 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. உடனே அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ரெஜிஸ் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


