News October 21, 2025

அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News October 22, 2025

அரியலூர்: பேரிடர் கால தகவல் எண்கள் வெளியீடு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரியலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை சார்பாக மழைகளின் போது, TN Alert செயலி பேரிடர் காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க உதவுகிறது. அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் கால கட்டுப்பாட்டு மைய எண்கள்: 1077, 04329 – 228709. வாட்ஸ்அப் – 9384056231 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.21) இரவு 10 மணி முதல் இன்று (அக்.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 21, 2025

அரியலூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!