News October 21, 2025
RTE மாணவர் சேர்க்கையில் திமுக படுதோல்வி: அன்புமணி

RTE-யின் கீழ் தனியார் உயர்நிலை & மேல்நிலை பள்ளிகளில் உள்ள 34,666 இடங்களுக்கு, வெறும் 16,006 பேரே சேர்ந்துள்ளது, திமுக அரசு படுதோல்வி அடைந்ததை காட்டுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். இதுவரை பள்ளியில் சேராதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தால், மீதமுள்ள 18,600 இடங்களும் நிரம்பியிருக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே, மீண்டும் மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக ஏற்கெனவே <<18068743>>15 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
News October 22, 2025
மழைக்காலத்தில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..

*ஈரமான கையோடு சுவிட்ச் on/ off செய்ய வேண்டாம்.
*மின்சார கம்பிகள் அறுந்திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
*இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மொபைல், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.
*குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம். *பழச்சாறுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். *பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
News October 22, 2025
BREAKING: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN-ல் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.