News October 21, 2025

நீலகிரி: மின்சாரத்துறையில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் (31.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News October 22, 2025

நீலகிரி மக்களே உஷார்! வெளுக்கப்போகும் மழை

image

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக, அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 22, 2025

நீலகிரி: 5வது நாளாக இன்றும் ரத்து!

image

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. கனமழையால் காட்டேரி, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 22, 2025

நீலகிரி: மின்னொளியில் ஜொலிக்கும் மலை ரயில் நிலையம்!

image

குன்னூர் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குன்னூர் ரயில் நிலையம் தீபாவளி திருநாளில் கொண்டாடும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அற்புதமாக தெரியும் இக்காட்சிகளை குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

error: Content is protected !!