News October 21, 2025
நாமக்கல்லில் கல்விக் கடன் வேண்டுமா..?

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் வருகிற அக்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கல்வி கடன் முகாம் மாணவர்களின் உயர்கல்வி தொடர்ச்சியான நிதி ஆதரவாக அமைந்துள்ளது. இந்த முகாம் நடைபெறும் இடம் : பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள 15 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறும்.
Similar News
News October 22, 2025
நாமக்கல் காவல்துறையின் எச்சரிக்கை!

மழைக்காலம் என்பதால் குழந்தைகளை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க விடாமல் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகளின் ஆழம், நீரோட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம். பாதுகாப்பே முதன்மை என மக்கள் நலனுக்காக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 22, 2025
JUST IN: நாமக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.